டிக்கோயா திருடனை சிக்க வைத்த சிசிரிவி காட்சிகள்!

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் டிக்கோயா நகரபகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் 30 ஆயிரம் ரூபா பணமும் ஒரு தொகை சிகரெட்கள் மற்றும் மீள்நிரப்பும் அட்டைகள் என்பவற்றை கொள்ளையிட்ட சந்தேக நபரை சி.சி.ரி.வி கமராவின் உதவியோடு கைது செய்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (25) மாலை வேளையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நேற்று காலை வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் வர்த்தக நிலையத்தினை திறந்து வைத்து விட்டு வீட்டின் சமையலறை பக்கம் சென்ற வேளை வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த சந்தேக நபர் பணம், மீள்நிரப்பும் அட்டைகள், சிகரெட்கள் என்பவற்றை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

அதனடையடுத்து, சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.

பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற ஹட்டன் பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்திருந்தனர்.

அதன்படி, வர்த்தக நிலையத்திற்கு அருகாமையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமரா பரிசோதிக்கப்பட்ட போது கொள்ளையிடும் காட்சி அதில் பதிவாகியிருந்தமை தெரியவந்தது.

அதனடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 30 ஆயிரம் ரூபா பணம் மற்றும் ஒரு தொகை மீள்நிரப்பும் அட்டைகள் மற்றும் ஒரு தொகை சிகரெட்கள் என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சாமிமலை மானிலு தோட்டபகுதியை சேர்ந்தவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்றைய தினம் (26) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கையினை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here