இணையத்தை கலக்கும் தர்ஷா குப்தாவின் புகைப்படங்கள்!

இணையதளங்களில் அழகால் மட்டுமல்ல தன்னுடைய கவர்ச்சியாலும் ரசிகர்கள் படை பலத்தை அதிகரித்து ரசிகர்களின் தலைவியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தர்ஷா.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் கோயம்புத்தூரில் வசித்து வருகிறார். சிறு வயதில் இருந்தே நடிப்பதில் ஆர்வம் கொண்டதால் காலேஜ் முடித்ததும் நடிப்பதற்கு வந்துவிட்டார்.

முதலில் மாடலாக அறிமுகமாகி அதன்பிறகு ஜீ தமிழில் முள்ளும் மலரும் சீரியல் மூலமாக கதாநாயகியாக நடிக்கத் தொடங்கினார். அந்த சீரியலில் இவர் அழகான கிராமத்து குடும்ப பெண்ணாகவும் தற்போது விஜய் டிவியில் செந்தூரப்பூவே சீரியலில் வில்லியாகவும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

கதாநாயகியாக நடித்ததை விடவும் இவருக்கு வில்லியாக நடிப்பதில் பிடித்தமாக இருக்கிறதாம். கதாநாயகியாக நடிக்கும் போது ரசிகர்கள் இவரை புகழ்ந்து தள்ளினாலும் தற்போது இவர் வில்லியாக நடிக்கும் போது கழுவி கழுவி ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இருந்தாலும் தன்னால் இரண்டு கேரக்டரில் நடிக்க முடியும் என்று காட்டுவதற்காக மேலும் கிளிசரின் போடாமல் மேக்கப் போட்டு இருக்கலாம் என்பதற்காக தான் இந்த வில்லி கேரக்டரை இவர் செலக்ட் பண்ணியிருக்கிறாராம்.

சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் இவர் இணைய தளத்தில் தினமும் போஸ்ட்கள் போடுவதில் தவறாமல் இருக்கிறார். நடித்துக் கொண்டிருக்கும் போதும் போட்டோ ஷூட் நடத்துவதில் ரொம்பவும் ஆர்வமாக இருக்கிறாராம். சீரியல் என்றால் ஒரு நாள் முழுக்க நடிக்க வேண்டியதிருக்கிறது. ஆனால் போட்டோஷூட்டில் இரண்டு மணி நேரம் அல்லது மூன்று மணி நேரம் நடித்தால் போதும்.

அதனால் போட்டோ ஷூட் தான் அவருக்கு பிடித்திருக்கிறதாம். மேலும் அவர் தன்னுடைய ரசிகர்களின் ஆசைக்காக அப்பப்போ லைவ் வந்து ரசிகர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் இவருடைய போட்டோக்களுக்கு ரசிகர்கள் போடும் கமெண்ட்களுக்கும் பதில் அளித்துக் கொண்டிருக்கிறார். இந்த மாதிரி ஒரு நடிகை ரிப்ளை பண்ணுவது ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்ததாக இருக்கிறதாம்.

இவரை எல்லா ரசிகர்களும் தலைவி என்று செல்லமாக அழைக்கிறார்கள். இவர்கள் இப்படி கூப்பிடுவது தர்ஷாவுக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறதாம். அதுமட்டுமல்லாமல் இவர் இவருடைய ரசிகர்களின் கேள்விகளுக்கும் லைவில் பதில் அளித்துக்கொண்டிருக்கிறார். அதில் தனக்கு இந்த மாதத்தில் நான்கு அல்லது ஐந்து நாள் விடுமுறை இருப்பதாகவும் அதில் இன்னும் நிறைய போட்டோக்களை எடுத்து அப்லோட் பண்ணுவதாகவும் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் இவர் போட்டோஷூட் டுகளில் மட்டும்தான் மேக்கப் போட்டுக்கொண்டு போட்டோக்களை போட்டிருக்கிறார்கள். லைவ்வில் வரும்போது மேக்கப் போடாமல் சிம்பிளாக வருகிறார். இதைப் பார்த்த அவருடைய ரசிகர்கள் இவரை புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

தனக்கு இவ்வளவு பக்கபலமாக இருந்து தன்னுடைய பிரண்ட்ஸ் கள் போலவே ரசிகர்களும் சப்போர்ட்டாக இருப்பதை நினைத்து பெருமையாக இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். இன்னமும் தனக்கு ஆறுதலையும் ஒத்துழைப்பையும் தர வேண்டுமென்றும் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவருடைய ரசிகர்களிடம் இவர் நான் சேலை கட்டிக்கொண்டு போஸ்ட் போட்டால் நல்லா இருக்கிறதா இல்லை மாடல் டிரஸ் இல் போட்டோஸ் நல்லா இருக்கிறதா என்றும் லைவ் இல் கேட்டிருந்தார்.

அதில் சேலை கட்டிக்கொண்டு போஸ்ட் போட வேண்டுமென்றால் மஞ்ச கலர் ஹார்ட்டின் அனுப்புங்கள் அல்லது மாடர்ன் டிரஸ் ஃபோட்டோ போட வேண்டுமென்றால் பச்சைக்கலர் ஆட்டினை அனுப்புங்கள் என்று சொல்லி இருந்தார். அவர் சொல்லி முடித்ததும் ரசிகர்கள் மஞ்சள்கலர் ஹார்ட்டின்களை குவித்து தர்ஷாவை உருக வைத்து விட்டார்கள் ரசிகர்கள். அப்ப, அம்புட்டு பேருக்கும் தர்ஷாவை சேலையில் பார்க்கத்தான் ஆசை போலிருக்கு.

ரசிகர்களின் ஆசைக்காக இனி சேலை கட்டிக்கொண்டு போட்டோஸ் போடுவேன் என்றும் ரசிகர்களுக்கு கூறியிருக்கிறார். இவர் சேலை கட்டி இப்போ போட்டிருக்கும் போட்டோஸ்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் போடுகிறேன் என்று வேறு சொல்லியிருக்கிறார். இது எந்த அளவிற்கு போகப் போகிறது என்று தெரியவில்லை. இன்னும் ரசிகர்களை சுண்டி இழுக்க போகிறார் என்று மட்டும் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here