அனைத்து வகையான போட்டிகளிலிருந்தும் தரங்க பரணவிதான ஓய்வுபெற்றார்!

இலங்கை முன்னாள் டெஸ்ட் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தரங்க பரணவிதான (38) அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதை அறிவிக்க முடிவு செய்துள்ளார்.

இலங்கைக்காக 32 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய இடது கை துடுப்பாட்டக்காரர், நேற்று தனது முதல் தர கிரிக்கெட் ஆட்ட வாழ்க்கையை முடித்துக்கொண்டார். கோல்ட்ஸ் மைதானத்தில் தமிழ் யூனியனுக்கும் நீர்கொழும்பு சி.சி.க்கும் இடையிலான ஆட்டமே அவரது இறுதி முதல்தர ஆட்டமாகியது.

இந்தியாவுக்கு எதிரான 2 டெஸ்ட் சதங்கள் உட்பட 40 சதங்களுடன் பரணவிதான 14,913 முதல் தர ஓட்டங்களை அடித்தார்.

இலங்கையின் உள்ளூர் ஆட்டங்களில் அதிக ஓட்டம் பெற்றவர் என்ற சாதனையும் அவரிடம்தான் உள்ளது. 48.16 சராசரியாக 12,522 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here