நாவலப்பிட்டிய நகரசபை ஊழியர்கள் கடத்தப்பட்டு தாக்கப்பட்டனர்!

நாவலப்பிட்டிய நகரசபையின் ஊழியர்கள் நால்வர் வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நாவலப்பிட்டிய நகரசபையின் கலோயா குப்பை கொட்டுமிடத்தில் பணிபுரிந்த இரண்டு பேரும், கழிவகற்றல் வாகனமொன்றின் சாரதியும், நடத்துனருமே தாக்கப்பட்டுள்ளனர்.

வாகன சாரதயும், நடத்துனரும் 23ஆம் திகதி இரவு வெள்ளைவாகனத்தில் கடத்தப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர். தாக்குதலின் இடையில் ஒருவர் தப்பித்தார். மற்றவர் தாக்கப்பட்ட பின் பள்ளமொன்றிற்குள் வீசப்பட்டார்.

கடந்த பொதுத்தேர்தலின் போது சஜித் தரப்பிற்கு பணியாற்றியவர்களே தாக்கப்பட்டனர். தாக்கப்பட்டபோது, சில அரசியல் பிரமுகர்களின் பெயர்கள் உச்சரிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டிய பொலிசார் விசாணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here