நெல்லியடி நகரில் தரமற்ற முச்சக்கரவண்டிகளே அதிகம் சேவையில்: தவிசாளர் அதிரடி நடவடிக்கை!

நெல்லியடி நகர பகுதியில் உள்ள சில முச்சக்கரவண்டிகள், வாடிக்கையாளருக்கு தரமற்ற சேவை வழங்குவதாக (முச்சக்கரவண்டிகளின் பராமரிப்பு இன்மை, அதிக புகை, அதிக ஒலி, பொருத்தமற்ற இருக்கைகள், அதிகளவு அதிர்வுடன் கூடிய இயந்திர இயக்கம் போன்ற பல்வேறு அசௌகரியங்கள் தொடர்பாக) தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகளை அடுத்து கரவெட்டி பிரதேசசபை தவிசாளர் அதிரடி நடவடிக்கையெடுத்துள்ளார்.

இன்றைய தினம் நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC) உட்பட பொலிஸ் அதிகாரிகள் சகிதம் சகல முச்சக்கர வண்டிகளும் பரிசோதனைக்குட்படுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இன்று 34 முச்சக்கரவண்டிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் 12முச்சக்கர வண்டிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு பொருத்தமான வண்டிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

ஏனைய முச்சக்கர வண்டிகள் குறைபாடுகளுடன் காணப்பட்டன. அவவற்றை சீர் செய்ய காலஅவகாசம் வழங்கப்பட்டு மீண்டும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு எதிர்வரும் 01ம் திகதி முதல் பாவனைக்கு விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here