முல்லைத்தீவு கோட்டையில் பண்டாரவன்னியன் பீரங்கியை கைப்பற்றிய நாள்: கற்சிலைமடுவில் வெற்றி நினைவு விழா!

வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு ஆங்கிலேயர் கோட்டையை வெற்றி கொண்டதன் 217 ஆவது ஆண்டு வெற்றி நினைவு விழா முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் கற்சிலைமடு பண்டாரவன்னியன் உருவச்சிலை வளாகத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.

மாவீரன் பண்டாரவன்னியனின் திருவுருவப்படம் தாங்கி பவனியாக வருகை தந்த நிகழ்வு குழுவினர் பண்டாரவன்னியன் திருவுருவப் படத்திற்கு சுடர் ஏற்றி வைத்து பண்டாரவன்னியனின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து நிகழ்வுகள் இடம்பெற்றன.

நிகழ்வில் வருகை தந்த அதிதிகளால் மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டது.

நிகழ்வில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் த.அகிலன், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் செல்லையா பிறேமகாந், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உப தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஆண்டிஐயா புவனேஸ்வரன் மற்றும் பண்டாரவன்னியன் அறங்காவலர் குழுவின் உறுப்பினர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here