மேலும் 12 பேருக்கு கொரோனா!

நாட்டில் மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து நாடுதிரும்பிய 12 பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,971 ஆக அதகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான 143 பேர் தொடர்ந்தும் நாடு முழுவதும் உள்ள 09 வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, 62 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 12 பேர் உயிரிழந்தும் 2,816 பேர் குணமடைந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here