மு.கா- இந்திய தூதர் சந்திப்பு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்திய தூதரகத்தின் உயர் ஸ்தானிகளுக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு இன்று (25) செவ்வாய்க்கிழமை இலங்கைக்கான இந்திய தூதரகத்தில் இடம் பெற்றது.

இச் சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தலைவர் ரவூப் ஹக்கீம், பிரதித் தலைவரான அல்-ஹாபிஸ் நஸீர் அகமட் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம் மற்றும் தௌபிக் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்திய தூதரகத்தின் உயர் ஸ்தானியான கோபால் பக்லே, பிரதி உயர் ஸ்தானியான வினோத் கே. ஜோகப் மற்றும் திருமதி பானு பிரகாஸ் (தலைமை அரசியல் மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பாளர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அல்- ஹாபிழ் நஸீர் அகமட்டினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி சம்மந்தமாக பேசப்பட்டது. அதில் விமான நிலைய விஸ்தரிப்பு, இலங்கை இந்திய பயணிகள் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவது தொடர்பாகவும், இந்திய துணைத்தூதரகம்
கைத்தொழில் பேட்டைகள் தொழிநுட்ப பயிற்சி நிலையங்கள் அமைப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதோடு,தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் இந்தியாவின் எதிர்கால ஒத்துழைப்பு தொடர்பிலான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here