2100ஆம் ஆண்டில் இலங்கையின் சனத்தொகை பாதியாக குறைவடையும்: அதிர்ச்சி அறிக்கை!

2100 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மக்கள் தொகை, தற்போதைய மக்கள் தொகையின் அரைவாசியாக குறையும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இன்னும் 80 ஆண்டுகளில் இந்த மாற்றம் நிகழலாம்.

கருவுறுதல், இறப்புகள், இடம்பெயர்வு மற்றும் மக்கள்தொகையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பிற காரணிகள் குறித்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் “லான்செட்” என்ற முன்னணி பத்திரிகை இந்த கணிப்பை வெளியிட்டுள்ளது. 195 நாடுகளின் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, 2100 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மக்கள் தொகை 10.45 மில்லியனாகக் குறைவடையுமென கணிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மக்கள் தொகை 2017 ஆம் ஆண்டில் 21.60 மில்லியனாக இருந்தது, 2031 ஆம் ஆண்டளவில் இலங்கை அதன் அதிகபட்ச மக்கள் தொகையான 22.34 மில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டில், ஒரு பெண்ணின் கருவுறுதல் வீதம் 1.80 என்று அறிக்கை மேலும் கூறுகிறது. இது வரும் 80 ஆண்டுகளில் 1.46 என்ற விகிதத்தில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுகாதார பரிந்துரைகளின்படி, ஒரு நாட்டின் கருவுறுதல் விகிதம் 2.1 ஐ விடக் குறைவாக இருந்தால், அந்த நாட்டின் மக்கள் தொகை சரிவைக் காணும் என்று நம்பப்படுகிறது.

பொருளாதார நிலை, சுகாதார நிலை, பெற்றோர்கள் எதிர்கொள்ளும் தொழில்முறை பிரச்சினைகள், சமூக பிரச்சினைகள் போன்ற காரணிகளை உள்ளடக்கிய மற்றும் அவை மட்டுமின்றி பல்வேறு காரணங்களால் இது ஏற்படக்கூடும் என்று சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here