இலங்கையின் சுகாதார பராமரிப்பு அமெரிக்காவை விட சிறப்பாக இருப்பதாகக் அமெரிக்க பெண்ணொருவர் பாராட்டு தெரிவித்தது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
எலியானா அப்பிசெல்லா என்ற அமெரிக்க பெண் தனது நீண்டகால வயிற்று வலியை பரிசோதிக்க அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியர் பி.கே.ரவீந்திரன் தலைமையிலான குழுவினர் அவருக்கு கல்லடைசல் என்பதை இகண்டறிந்து தேவையான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியிருந்தார்.
இதன் பின்னர் சமூக ஊடகங்களில் கருத்திட்ட அந்த அமெரிக்க பெண், அமெரிக்காவை விட இலங்கையில் சிறந்த மருத்துவ வசதி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.