வவுனியாவில் பண்டார வன்னியன் நினைவுநாள்!

வன்னி இராச்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 217ஆவது நினைவு நாள் நிகழ்வு வவுனியாவில் இன்று விமர்சையாக அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா நகரசபை மற்றும் விழாக்குழுவின் ஏற்பாட்டில்
நகரசபை தலைவர் இ. கௌதமன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றது.

இரு நிகழ்வுகளாக ஏற்பாடுசெய்யப்பட்ட குறித்த நிகழ்வுகள் காலை 8.15மணிக்கு வவுனியா மாவட்டசெயலக முன்றலில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின்  நினைவுத்தூபிக்கு ஜனாதிபதி சட்டத்தரணி மு.சிற்றம்பலம் மலர்மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார், அதனைத்தொடர்ந்து  நகரசபை உறுப்பினர்கள்,பொது அமைப்பினரும் சிலைக்கு மாலை அணிவித்து,மலரஞ்சலியும் செலுத்தினர்.நிகழ்வின் இறுதியில் தமிழருவி சிவகுமாரனால் பண்டாரவன்னியன் தொடர்பான நினைவுப்பேருரையும்  நிகழ்தப்பட்டிருந்து.

ஏனைய நிகழ்வுகள் காலை 9.30 மணியளவில் வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

மங்களவிளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில்  தலைமை உரையைதொடர்ந்து கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்ததுடன், தொடர்ந்து பண்டாரவன்னியன் தொடர்பான வரலாற்றுரையை மூத்த ஊடகவியலாளர் அருணா செல்லத்துரை நிகழ்தினார்.

நிகழ்வில் பிரதம விருந்தினராக சட்டத்தரணியும் முன்னாள் வவுனியா மாவட்ட சபை தலைவருமானமு.சிற்றம்பலம் கலந்துகொண்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், மாவட்ட செயலாளர் சமன் பந்துலசேன, மேலதிகசெயலர் தி.திரேஸ்குமார், வவுனியா வளாக முதல்வர் ரி.மங்களேஸ்வரன், உள்ளூராட்சிமன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் கலந்துகொண்ருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here