நடமாடும் பார் லைசன்ஸ் வழங்கப்பட்ட இ.போ.ச பேருந்து; பெண்களிற்கு பாலியல் தொல்லை: வவுனியாவில் சம்பவம்!

வவுனியாவிலிருந்து செட்டிக்குளம் செல்லும் இ.போ.ச பேருந்து மதுக்கூடமாகவும், பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் இடமாகவும் மாறியுள்ளது.

வவுனியாவிலிருந்து பூவரசங்குளம் ஊடாக செட்டிக்குளம் மெனிக்பாம் நோக்கி இரவு 8.00 மணிக்கு புறப்படும் பேருந்திலேயே இந்த சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவிலிருந்து புறப்படும் பேருந்தில் பயணிக்கும் சிலர், பேருந்துக்குள் வைத்தே மதுபானம் அருந்துவதுடன், பேருந்தில் பயணிக்கும் யுவதிகளுடன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவது வழக்கமாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

இந்த நடவடிக்கைகளை சாரதியும், நடத்துனரும் கண்டுகொள்வதில்லை.

வவுனியா இலுப்பையடி சந்தியிலிருந்து புறப்படும் இந்த பேருந்து பூவரசங்குளம் 8ஆம் கட்டையிலுள்ள மதுபான நிலையத்தின் முன்பாக நிறுத்தப்படுகிறது. சமூக விரோதிகளிற்கு வசதியாகவே அந்த இடத்தி் சாரதியும், நடத்துனரும் பேருந்தை நிறுத்துகிறார்கள், இந்த சமூக விரோத செயல் குறித்து பூவரசங்குளம் பொலிசாருக்கு அறிவித்தபோதும் நடவடிக்கையெடுக்கப்படவில்லையென பொதுமக்கள் குற்றம்சுமத்துகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here