உலக தடகள ஜாம்பவான் உசைன் போல்ட் கொரொனா தொற்றிற்குள்ளாகியுள்ளார் என ஜமெய்க்கா ஊடகங்ள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமீபத்தில் தனது 34வது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார். பின்னர் அவர் மேற்கொண்ட பரிசோதனையில், கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது கடந்த ஞாயிறு உறுதியானதென ஜமெய்க்கா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் தற்போது தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
எனினும், தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதென உசைன் போல்ட் அறிவிக்கவில்லை. சில வெளிநாட்டு பயணத்திற்காக பரிசோதனை செய்தேன், அதை தொடர்ந்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்றுள்ளார்.