யாழ் போதனா வைத்தியசாலையின் அசமந்தத்தாலேயே முல்லைத்தீவிற்கு வைத்தியர் அனுப்பப்படவில்லை!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யகோரி பல தடவைகள் மக்கள் போராட்டம், வைத்தியர்கள் பணிபுறக்கணிப்ப போராட்டங்கள் மேற்கொண்டு சுகாதார அமைச்சிற்கு தெரியப்படுத்திய நிலையில் கடந்த 19.08.2020 அன்று சுகாதார அமைச்சினால் யாழ்போதனா வைத்திய சாலை பணிப்பாளருக்கு பெயர் குறிப்பிட்டு வைத்தியர்களை உடனடியாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்குமாறு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுவரை நிரந்தரமாக வைத்தியர்களை அனுப்பவில்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் த.அமலன் சுகாதர அமைச்சினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள இந்த அறிவித்தல் கடிதங்களை மாவட்ட மருத்துவமனையின் நிர்வாகத்திடம் தகவல் அறியும் சட்டம் ஊடாக கேட்டுப்பெற்றுள்ளார்.

யாழ்போதனா மருத்துவ மனையின் அசமந்த போக்கு தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here