மாணவனை துஷ்பிரயோகம் செய்த நடன ஆசிரியர் கைது!

17 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மேல் மாகாணத்தில் நடன ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் முடித விதானபதிரன தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடந்த சம்பவம் காரணமாக இந்த இளைஞன் கடுமையான மன அதிர்ச்சியை சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

விளையாட்டு மைதானnமான்றில் நடைபெற்ற இரவு நடன நிகழ்ச்சிக்கான ஒத்திகையின் போது துஷ்பிரயோகம் நடந்ததாக கூறப்படுகிறது.

42 வயதான சந்தேக நபர், இளைஞனை பயிற்சிக்கு பிறகு இரவு உணவு வாங்கும் போர்வையில் தனது காரில் அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கியுள்ளார்.

அந்த நபர் சிறுவனுக்கு போதைப்பொருள் கலந்த பானத்தை குடிக்க வழங்கினார். பின்னர் அவர் மயக்கத்தில் இருந்தபோது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here