தண்ணீர் போத்தல்கள், ஷம்போ பைக்கற், ஸ்ட்ரோ- ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களிற்கு விரைவில் தடை!

ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களை 2021 முதல் தடை செய்ய அமைச்சரவையில் முன்மொழியப்பட உள்ளது.

சுற்றுச்சூழல் அதிகாரசபை (சி.இ.ஏ) அதற்கான முன்மொழிவுகளை வழங்கியுள்ளது.

ஷம்போ மற்றும் ஹேர் ஜெல், பிளாஸ்டிக் ஸ்ட்ரோ, பிளாஸ்டிக் நீர் போத்தல்களை தடை செய்வதில் கவனம் செலுத்துகிறது.

இத்தகைய பொருட்களின் பயன்பாடு காரணமாக சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து  விரிவான அறிக்கையை சுற்றுச்சூழல் அதிகாரசபை சமர்ப்பித்துள்ளது.

சுற்றுச்சூழல் அதிகாரசபையின் இயக்குனர் ஹேமந்த ஜெயசிங்க கூறுகையில், குளிர்பானங்களைக் கொண்ட சிறிய பிளாஸ்டிக் போத்தல்களைப் பயன்படுத்துவதும் இந்த திட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தப்பட உள்ளது.

பிளாஸ்டிக் தயிர் கரண்டிகள் மற்றும் சட்டைகளை பொதி செய்ய பயன்படும் பிளாஸ்டிக் கிளிப்களுக்கான சாத்தியமான மாற்று வழிகளையும் சுற்றுச்சூழல் அதிகாரசபை பரிசீலித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here