தூய அலங்கார அன்னை பேராலய தேர்பவனி

தூய அலங்கார அன்னை பேராலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு அலங்கார அன்னையின் அலங்கரிக்கப்பட்ட தேர் பவனி நடைபெற்றது. இந்த தேர் ஆலயத்தை சுற்றி வந்தது.

தூய அலங்கார அன்னை பேராலய தேர்பவனி
தூய அலங்கார அன்னை பேராலய தேர்பவனி
கும்பகோணம் காமராஜர் சாலையில் உள்ள தூய அலங்கார அன்னை பேராலய ஆண்டு திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முதன்மை குரு அமிர்தசாமி கலந்து கொண்டு கொடி ஏற்றி வைத்தார். தேர்பவனியை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் திருப்பலி நடைபெற்றது.

திருப்பலியை தொடர்ந்து இரவு 8 மணிக்கு அலங்கார அன்னையின் அலங்கரிக்கப்பட்ட தேர் ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்டது. கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி பிரார்த்தனை செய்து தேர்பவனியை தொடங்கி வைத்தார். இந்த தேர் ஆலயத்தை சுற்றி வந்தது. இதற்கான ஏற்பாடுகளை அருட்தந்தையர்கள் மற்றும் அருட் சகோதரிகள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here