சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பேயர்ன் முனிச் அணி ஆறாவது முறையாக மகுடம் சூடியது

ஐரோப்பாவில் நடைபெறும் உயர்தர கால்பந்து கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், பேயர்ன் முனிச் அணி ஆறாவது முறையாக மகுடம் சூடியுள்ளது.

டா லூஸ் விளையாட்டரங்களில் உள்ளூர் நேரப்படி இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், பேயர்ன் முனிச் அணி, முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணியை எதிர்கொண்டது.

இரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்போட்டியில், இரு அணிகளால் முயற்சித்தும் முற்பாதியில் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முற்பாதி கோல் எதுவுமின்றி நிறைவுக்கு வந்தது.

பிற்பாதியில் இரு அணிகளும் கோல் போடுவதற்கு கடுமையாக முட்டி மோதிக் கொண்டன. எனினும், வெற்றி கோலை புகுத்துவதற்கான வாய்ப்பு 11 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பேயர்ன் முனிச் அணிக்கு கிடைத்தது.

போட்டியின் 59ஆவது நிமிடத்தில் அணியின் வீரரான கிங்ஸ்லீ கோமான் வெற்றி கோலை வலைக்குள் புகுத்தி அணியை வெற்றிபெற செய்தார்.

போட்டியின் இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் பேயன் முனிச் அணி வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தை வென்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here