இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், மூன்றாம் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி, நேற்றைய ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 273 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், பாகிஸ்தான் அணி 310 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

சவுத்தாம்ப்டன்- ரோஸ் பவுல் மைதானத்தில் 21ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்ஸிற்காக 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 583 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை, தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ஸெக் கிரவ்லி 267 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 152 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், ஷாயீன் அப்ரிடி, அலாம் மற்றும் யாசிர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், நயீம் ஷா மற்றும் சபீக் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொங்கிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 273 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, அசார் அலி ஆட்டமிழக்காது 141 ஓட்டங்களையும், மொஹமட் ரிஸ்வான் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், ஜேம்ஸ் எண்டர்சன் 5 விக்கெட்டுகளையும், ஸ்டுவர்ட் பிரோட் 2 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் டோமினிக் சிப்ளி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

தற்போது 310 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ள இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் அணியை போலோ ஒன் முறையில் துடுப்பெடுத்தாட அழைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here