கிராஸில் யூத சமூகத் தலைவர் மீது தாக்குதல்

தெற்கு நகரமான கிராஸில் ஒரு யூத சமூகத் தலைவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒஸ்திரிய அதிபர் செபாஸ்டியன் குர்ஸ் மற்றும் பிற மூத்த அரசாங்க அரசியல்வாதிகள் தெரிவித்தனர்.

மேலும் ஒஸ்திரியாவைச் சுற்றியுள்ள யூத தலங்கள் கடுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

கடந்த வாரத்தில் காழ்ப்புணர்ச்சியால் இரண்டு முறை குறிவைக்கப்பட்ட கிராஸ் யூத சமூகத்தின் தலைவர் எலி ரோசன் மீது ஜெப ஆலயத்தின் வளாகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதன்போது ரோசன் தனது காரில் தஞ்சமடைந்தார் என்றும் பின்னர் தாக்குதல் நடத்தியவர் தப்பி ஓடிவிட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிராஸ் அமைந்துள்ள மாகாணமான ஸ்டைரியாவில் பொலிஸார் சந்தேக நபரைத் தேடி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

“ரோசன் மீதான தாக்குதலால் தான் அதிர்ச்சியடைந்ததாகவும், குற்றவாளியைக் கண்டுபிடித்து, நாட்டில் யூத சமூகத்தின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க அதிகாரிகள் தங்களால் இயன்றதைச் செய்வார்கள்” என்றும் குர்ஸ் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அத்தோடு இந்த சம்பவத்தை அடுத்து ஒஸ்திரியாவில் உள்ள அனைத்து யூத நிறுவனங்களின் கண்காணிப்பும் கடுமையாக்கப்படும் என உள்துறை அமைச்சர் கார்ல் நெஹம்மர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here