செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி பட்டதாரிகள் பயிற்சியில் இணைத்துக்கொள்ளப்படுவர்

பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் அவர்களை பயிற்சியாளர்களாக அரச நிறுவனங்களில் அடுத்த மாதம் 2 ஆம் திகதி இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள்.

இதற்கான பணிகள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக அரச சேவை மாகாண சபை மற்றும் உள்ளூரட்சி மன்ற அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்தலின் போது அளித்த வாக்குறுதிக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

தனது அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்ற அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், தமது அரசாங்கம் பெப்ரவரி மாதம் இந்த வேலைத்திட்டத்திற்காக பட்டதாரிகளிடம் விண்ணப்பங்கள் கோரப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

2019 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி அன்று பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர் ஊடாக இவர்களுக்குரிய நியமனக்கடிதங்களை வழங்குவதற்கு ஒழுங்குள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகள் அனைவரதும் விபரங்கள் அதிகாரிகள் பூர்த்தி செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here