கலிபோர்னியா காட்டுத் தீ: பேரிடர் நிலையாக டொனால்ட் ட்ரம்ப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பெரும் காட்டுத் தீயை பேரிடர் நிலையாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

இம்மாத தொடக்கத்தில் இருந்து வேகமாகப் பரவிவரும் இந்தக் காட்டுத்தீ சுமார் 585 இடங்களில் பரவியுள்ளது. இந்நிலையில் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் 14 ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை ஒரு மில்லியன் ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளதுடன் பலத்த காற்று காரணமாக தீ வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் தீயணைப்பு வீரர்கள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மலைப்பாங்கான மற்றும் பலகை குடியிருப்புக்களைக் கொண்ட 3 இடங்களிலேயே பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் சென்.ஜோஸை அண்மித்த குடா பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோரை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்புவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த பாரிய காட்டுத்தீயை பேரிடர் நிலையாக அறிவித்துள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here