ஈரானின் நாடான்ஸ் அணு உலையில் தீ விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டது!

ஈரானின் நாடான்ஸ் அணு உலையில் கடந்த மாதம் ஏற்பட்ட தீ விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டது என ஈரான் அணு ஆற்றல் அமைப்பு தெரிவித்துள்ளது.

எனினும், யார் இதற்கு காரணம் என்பதை தெரிவிக்க மறுத்த ஈரான் அணு ஆற்றல் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் பெஹ்ரோஸ் கமால்வண், நாடான்ஸ் தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை உரிய நேரத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் வெளியிடுவார்கள் என கூறியுள்ளார்.

ஈரான் தலைநகரான தெஹ்ரானிலிருந்து 250 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த நாடான்ஸ் அணு வளாகம். இது ஈரானின் மிகப்பெரிய யுரேனியம் செறிவூட்டல் வசதி கொண்ட மையமாகும். இந்த அணு உலை வளாகத்தில் உள்ள சென்ட்ரிஃபூஜ் மையத்தில் கடந்த மாதம் தீவிபத்து ஏற்பட்டது.

செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்ய சென்ட்ரிஃபூஜ் தேவை. அணு உலைக்கான எரிபொருளாக இது பயன்படும். அதே நேரம் அணு ஆயுதம் உற்பத்தி செய்யவும் இதைப் பயன்படுத்தலாம்.

சேதமடைந்த கட்டடத்தை புதிய தொழில்நுட்பம் கொண்டு மாற்றி மேம்படுத்துவோம் என கடந்த மாதம் கமால்வண்டி தெரிவித்து இருந்தார். ஆனால், தீ சம்பவமானது மேம்பட்ட சென்ட்ரிஃபூஜ் உற்பத்தியைத் தாமதப்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here