கொரோனா வைரஸ் தொற்று:பஹ்ரேனில் இருந்து 180 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கைக்கு திரும்ப முடியாத நிலையில் இருந்த 180 இலங்கையர்கள் பஹ்ரேனில் இருந்து நாடு திரும்பியுள்ளனர்.

இக் குழுவினர் நேற்று (23) இரவு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் சிறப்பு விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

விமான நிலையத்திற்கு வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here