புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வீராங்கணையை பார்வையிட்ட நாமல்!

இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் இலங்கை பூப்பந்து வீராங்கணை ஓஷாதி குருப்புவை விளையாட்டுத்துறை அமைச்சர் நமல் ராஜபக்ஷ இன்று பார்வையிட்டார்

மகரகம அபேக்ஷா மருத்துவமனையின 23வது விடுதியில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

கொழும்பு விசாகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான ஓஷாதி குருப்பு, இந்தியாவின் 12 வது தெற்காசியா விளையாட்டுப் போட்டியில் பெண்கள் அணியில் இடம்பெற்றிருந்தார். அந்த அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

ஓஷாதி குருப்புவின் சிகிச்சைக்கு ரூ .10 மில்லியன் தேவைப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓஷாதியின் சிகிச்சைக்காக பணத்தை நன்கொடையாக வழங்குவதற்காக ஒரு தனியார் வங்கி கணக்கு திறக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது.

நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் தேவையான நிதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாமல் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here