7 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து பலி!

கிண்ணியாவில் ஏழு வயது சிறுவன் கிணற்றில் விழுந்து பரிதாபகரமாக மரணமாகியுள்ளார்.

கிண்ணியா பூவரசன்தீவு கிராமத்தில் நேற்று (23) பிற்பகல் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கிண்ணியா பூவரசன்தீவு எனும் கிராமத்தில் வழமை போன்று மாலை வேளையில் சகநண்பர்களுடன் நிஜாம் அஸ்னி (7) எனும் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கே அமைந்துள்ள பாழடைந்த கிணற்றில் இச்சிறுவன் தவறுதலாக விழுந்ததில் இம்மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆழமான இக்கிணறு மக்கள் பாவனையின்மையினால் அசுத்தமடைந்து இருந்துள்ள நிலையில் இக்கிணற்றின் பாதுகாப்புச் சுவர் மிகவும் தாழ்ந்த நிலையில் அமையப்பெற்றிருந்தது.

கிண்ணியா பூவரசன்தீவு யூசுப் வித்தியாலயத்தில் தரம் – 2 இல் கல்வி பயின்று வந்த மாணவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

இவரின் தாய் ஒரு ஆசிரியை என்பதும் தந்தை கடைவியாபாரி என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு இரண்டு மகன்மார்கள் ஒருவர் தரம் 9 கல்வி பயின்று வருகின்றார்.

மரணமான இம்மாணவனின் உடல் கிண்ணியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையினை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here