வட்டிக்கு பணம் தாருங்கள்; பதிலுக்கு துறைமுகமொன்றை அமைத்துக் கொள்ளுங்கள்: அப்போதே டச்சுக்காரர்களுடன் தமிழில் டீல் செய்த கண்டி அரசன்!

கண்டி இராச்சியத்தின் முதலாவது அரசரான வீரபராக்கிரம நரேந்திரசிங்க மகாராஜா (1700-1738) டச்சுக்காரரிடம் கடன் கேட்டு தமிழில் எழுதிய கடிதம் இது.

டச்சு ஆட்சியாளர்களின் சார்பில் தமிழகத்தின் தரங்கம்பாடி ஆளுனராக இருந்த முசல்யிட்டன் (MUheler Fort) என்பவருக்கு இந்த கடிதத்தை எழுதினார்.

ஆற்காடு நவாப் செய்த பண உதவிகள், கப்பித்தான் உள்படில் செய்த உதவிகளையும் குறிப்பிட்டு, நவாப்பிடம் வாங்கிய கடன் காலாவதி ஆவதால், வட்டியுடன் பணத்தை திருப்பி செலுத்த வேண்டியுள்ளதால், கடனாக 5,000 வராகனும், 2,000 துப்பாக்கியும் கடனாக கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கையை ஆண்ட டச்சுக்காரர், சிங்கள அரசரும் கொடுத்த பரிந்துரைகளையும் நினைவுபடுத்தி கடன் கேட்டுள்ளார். அதற்கு ஈடாக கண்டிய இராச்சியத்தில் துறைமுகம் ஒன்றை டச்சுக்காரர் அமைத்துக் கொள்ள அனுமதிப்பதுடன், பணத்தை வட்டியுடன் திருப்பி செலுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதத்தில் குறிப்பிடப்படும் நவாப், தாவுத்கானாக இருத்தல் கூடும் என கருதப்படுகிறது. அவர் 1703- 1710 வரை ஆர்க்காட்டு நவாப்பாக இருந்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here