ஒன்றுக்கும் பலனில்லாத அமைச்சரவை: சுரேஷ்!

எந்தவிதமான பிரயோசனமும் இல்லாத அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது.என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சி தலைவரான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்

கடந்த ஆவணி மாதம் 5 ம் திகதி நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் முன்னாள் வடக்குமாகாண முதலமைச்சரும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் மற்றும் கூட்டணியின் கட்சி தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வருகைதந்து இன்று காலை 11 மணியளவில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அகவணக்கம் செலுத்தி சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

எந்தவிதமான பிரயோசனமும் இல்லாத அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தஅரசின் அமைச்சரவை முழுக்க முழுக்க சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினை நிறுவக்கூடிய வகையில் குடும்பத்தின் ஆட்சியினை நிலை நிறுத்தக்கூடிய வகையிலும் தான் இந்த ஆட்சியின் அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் எதிர்காலம் என்பது மிகவும் கேள்விக்குரிய காலகட்டமாக இருக்கின்றது. தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கியள்ளார்கள். குறிப்பாக முல்லைத்தீவு மண் பறிபோகக்கூடிய நிலை இருக்கின்றது.

அதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்போது பாராளுமன்றம் சென்றுள்ள அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் முக்கியமான கடமை தமிழ் மக்களின் இருப்புக்களை பாதுகாப்பது தமிழர்களின் மண் பாதுகாக்கப்படவேண்டும். வடக்கு கிழக்கு நிலத்தொடர்ச்சி என்பது பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்காக உலகத்தின் ஒத்துழைப்புக்கள் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

வந்துள்ள அரசு சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினை நிலை நிறுத்துவதற்கான அரசாங்கம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறைந்தபட்சம் கொள்கை ரீதியாக இவ்வாறான விடயங்களில் அவர்கள் ஒன்றிணைய வேண்டும். அவ்வாறு ஒன்றிணையாமால் தனித்து செயற்படுவோம் என்பது வெளியில் பேச்சளவில் சரியாக இருந்தாலும் செயற்பாட்டினை பொறுத்தமட்டில் வடக்கு கிழக்கினை சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாராக இருந்தாலும் சரி வடக்கு,கிழக்கின் தனித்துவங்களும் அந்த மண்ணின் இருப்பும் பாதுகாக்கப்பட வேணும் என்பது மிக முக்கியமான விடயமாகும். இந்த விடயத்தில் ஒற்றுமையாக செயற்படவேண்டிய தேவையுள்ளது. இல்லாவிட்டால் கடுமையான நிலையினை எதிர்நோக்கும் கட்டத்தில் நாங்கள் வந்து கொண்டிருக்கின்றோம் என்றும் சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here