செஞ்சோலை நினைவேந்தலிற்கு தடை: கோட்டா அரசின் ஆட்டம் ஆரம்பம்!

செஞ்சோலை படுகொலையின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் அந்த நிகழ்வுகளை நடாத்த முடியாது என புதுக்குடியிருப்பு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தின் மீது 2006 ஆவணி 14 அன்று இலங்கை விமான படையினர் நடாத்திய தாக்குதலில் 54 மாணவிகள் உட்பட 61 பேர் படுகொலை செய்யபட்டதன் நினைவேந்தல் நிகழ்வுகள் வருடந்தோறும் வள்ளிபுனம் இடைக்கட்டு சந்தியில் நினைவேந்தல் குழுவால் நாடாத்தபட்டு வருகிறது.

இந்த நிலையில் இவ்வருடம் நாளை காலை நினைவேந்தல் நிகழ்வுகள் நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கபட்டு வந்த நிலையில் ஏற்பாட்டாளர்களை நேற்று (12)பொலிஸ் நிலையத்துக்கு அழைத்த புதுக்குடியிருப்பு பொலிஸார் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த முடியாது எனவும் அவ்வாறு நடாத்தினால் கைது செய்யபடுவீர்கள் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

என நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மொட்டு கூட்டணியில் யாழில் களமிறங்கிய அங்கஜன் இராமநாதன் தமிழ் மக்களின் உரிமைக்காக அரசுக்குள்ளிருந்து போராடப் போவதாக அறிவித்திருந்தார். நாளைய நினைவேந்தலில் அவர் அரசுக்குள்ளிருந்து போராடுவாரா என்றும் ஏற்பட்டாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here