மணிவண்ணனை கழற்றி விட்டனர் முன்னணி தலைவர்கள்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் அங்கம் வகித்தாலும், தற்போது சாதாரண உறுப்பினருக்கு வழங்கும் முக்கியத்துவத்தை கூட, கட்சியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணனிற்கு வழங்குவதில்லை கட்சித் தலைமை.

இதனால் கட்சியின் எந்த நடவடிக்கையிலும் தொடர்புபடாமல் மணிவண்ணன் ஒதுங்கியுள்ளார்.

கடந்த பல மாதங்களாகவே கட்சியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணனிற்கும், கட்சி தலைமைக்குமிடையில் லடாய் இருந்து வருகிறது. சுகாஷ்- மணிவண்ணன் லடாய் தோன்றியபோது, கட்சித்தலைமை சுகாஷ் பக்கமாக நின்று கொண்டது.

இதனால் மணிவண்ணனுடனான தொடர்பையும் கட்சி தலைமை துண்டித்து விட்டது. அண்மையில் நாடாளுமன்ற தேர்தலிலும் மணிவண்ணன் தானாக தேடிச் சென்று ஒட்டிக்கொண்டாலே தவிர, மற்றும்படி வேட்பாளர்கள் கூட்டங்களிற்கு முன்னணி தலைவர்கள் மணிவண்ணனலை அழைக்கவில்லை.

தேர்தலின் பின்னர் மணிவண்ணனை கட்சியை விட்டு ஒதுக்கும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. தேர்தலின் பின்னர் முன்னணி பிரமுகர்கள் நல்லை ஆதீனம், யாழ் ஆயர் ஆகியோரை சந்தித்ததுடன், வவுனியா எல்லைக்கிராமங்கிற்கு சென்றனர். எனினும், இவை பற்றி மணிவண்ணனிற்கு முன்னணி தலைமை ஒரு தகவலும் கொடுக்கவில்லை.

தற்போது கட்சியை விட்டு நீக்கப்பட்டவரை போலவமணிவண்ணனை கட்சி தலைமை கையாண்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here