நெல்லியடி பொதுச்சந்தையில் சட்டவிரோத கடைகளிற்கு சீல்!

நெல்லியடி பொதுச்சந்தையில் 8 கடைகளிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதில் 7 கடைகள் முஸ்லிம் வியாபாரிகளால் நடத்தப்பட்டு வந்தவை.

நெல்லியடி புதிய சந்தையில் இயங்கிய கடைகளில் 8 கடைகள் பிரதேசசபை சட்டங்களிற்கு முரணாக இயங்கி வந்ததுள்ளன. பிரதேசசபையிடம் கடைகளை குத்தகைக்கு பெற்ற உள்ளூர் வர்த்தகர்கள், அவற்றை வெளியிடங்களை சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர்களிற்கு குத்தகைக்கு வழங்கியிருந்தனர். இது பிரதேசசபை சட்டவிதிகளிற்கு முரணானது.

இந்த நிலையில் கரவெட்டி பிரதேசபை தவிசாளர் த.ஐங்கரன் நெல்லியடி புதிய சந்தை வர்த்தக நிலையங்களை ஆய்வு செய்து, இவ்வாறான 7 கடைகளிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், விதிகளிற்கு முரணாக இயங்கிய உள்ளூர் வர்த்தகர் ஒருவருடைய கடையும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

நெல்லியடி புதிய சந்தை கட்டிட தொகுதியில் இயங்கிய வெளிமாவட்ட வர்த்தகர்களின் கடைகளில் அண்மைய நாட்களில் போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன், அந்த வர்த்தகர்கள் தமக்குள் வாள்வெட்டு மோதல்களிலும் ஈடுபட்டனர். அத்துடன், சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here