அமைச்சு பதவி கிடைக்காதவர்களும், நிராகரித்தவர்களும்!

கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட அமைச்சரவையில், பல முன்னாள் அமைச்சர்களிற்கு இடம் ஒதுக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியடைந்த போதும், பலர் ஒதுக்கப்பட்டுள்ளனர்.

மைத்திரிபால சிறிசேன, எஸ்.பி.திசாநாயக்க, சுசில் பிரேமஜயந்த,
ரஞ்சித் சியாம்பலபிட்டிய, விஜேதாச ராஜபக்ஷ, ஜோன் செனவிரத்ன,
சந்திம வீரக்கொடி, அனுரா பிரியதர்ஷனா யாப்ப, டிலான் பெரேரா,
எஸ்.பி.திசநாயக்க, மஹிந்த யப்பா அபேவர்தன, மஹிந்த சமரசிங்க உள்ளிட்டவர்களிற்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை.

சபாநாயகர் பதவிக்கு மஹிந்த யாப்ப அபேவர்தன பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜேதாச ராஜபக்ஷ இராஜாங்க கல்வி சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூர கல்வி ஊக்குவிப்பு அமைச்சர் பதவியை நிராகரித்ததாக கூறப்படுகிறது.

எஸ்.பி.திசநாயக்க அமைச்சர் இல்லை என்றாலும், நுவரெலியா மாவட்டத்திற்கான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன சபாநாயகராகவோ அல்லது வேறு ஒரு உயர் பதவியிலோ நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here