26 அமைச்சர்கள், 39 இராஜாங்க அமைச்சர்கள்: சிறுபான்மையினருக்கு கஞ்சத்தனம்!

கண்டி தலதா மாளிகையில் இடம்பெற்ற பதவியேற்பு நிகழ்வில் 26 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சராக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றார்.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பட்டியலில் 2 சிறுபான்மையினர் இடம்பிடித்தனர். டக்ளஸ் தேவானந்தா, அலி சப்ரி ஆகியோர் அமைச்சு பதவிகளை ஏற்றனர்.

இந்த பட்டியலில் அலி சப்ரி, நாமல் ராஜபக்ச, உதய கம்மன்பில ஆகிய மூன்று புதுமுகங்கள் இடம்பிடித்துள்ளனர்.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர்களாக 39 பேர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். இதில் சிறுபான்மையினர் சார்பில் சதாசிவம் வியாழேந்திரன், ஜீவன் தொண்டமானிற்கே நியமனம் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here