மணல் கடத்தல் கும்பல் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வெவ்வேறு இடங்களில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு சந்தேக நபர்களும், நான்கு உழவு இயந்திரங்களும்; செவ்வாய்க்கிழமை மாலை கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பொன்டுகள்சேனை பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வருவதாக வாழைச்சேனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்தோடு சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வருவதாக வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகலையடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுனவின் வழிகாட்டலில் ஓட்டமாவடி காவத்தமுனை பிரதேசத்தில் வைத்து இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன்;, இரண்டு உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் சட்டவிரோத மரம் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், அதனை தடுப்பதற்கு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் விஷேட குழு ஒன்று செயற்பட்டு வருவதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here