இன்று அமைச்சரவை பதவியேற்கும் மகுல் மடுவ மண்டபத்தை பற்றி அறிந்திருக்கிறீர்களா?

புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கும் தலதா மாளிகையின் மகுல் மடுவ மண்டபம் இலங்கை வரலாற்றில் சிறப்பு மிக்க ஒரு இடமாகும்.

கண்டிய இராசதானியில் மன்னர், அமைச்சர்களை சந்தித்து பேசும் இடம் இதுவாகும். அத்துடன், இந்த மண்டபத்திலிருந்தே இராச்சிய நிர்வாகத்தை மன்னர் இராசசிங்கன் மேற்கொண்டார்.

அத்துடன், மன்னர் நீதி வழங்கும் இடமாகவும் இந்த மண்டபமே செயற்பட்டது.

இந்த மண்டபத்தின் மரக் கட்டமைப்பை 1783 ஆம் ஆண்டில் மன்னர் ராஜாதி ராஜசிங்கன் தனது ஆட்சிக்காலத்தில் தொடங்கினார். ஆனால் அவரது ஆட்சிக்குள்ளேயே அதை முடிக்க முடியவில்லை.

இலங்கையின் இறுதி மன்னான கண்டிய அரசன் கண்டிய இராச்சியத்தை 1815 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் சிம்மாசனத்திடம் ஒப்படைத்தான். அந்த ஒப்பந்தம் இந்த மண்டபத்திலேயே இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here