தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு விடுத்த சலஞ்சை ஏற்று மரக்கன்றை நட்ட நடிகர் விஜய்!

நடிகர் மகேஷ் பாபுவின் கிரீன் இந்தியா சலஞ்சை ஏற்று, நடிகர் விஜய் தனது வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டுள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தனது 45 வது பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாடி உள்ளார். வீட்டில் மரம் ஒன்றை நட்டு, கிரீன் இந்தியா சலஞ்சில் தனது பங்களிப்பை உறுதிபடுத்தி உள்ளார். இதனை நடிகர் விஜய் மற்றும் நடிகை சுருதிஹாசனும் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என டுவிட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். பசுமையான உலகத்தை நோக்கி மேலும் ஒரு படி நகருவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நடிகர் விஜய் மகேஷ் பாபுவின் சவாலை ஏற்று தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டுள்ளார். தான் மரக்கன்று நடும் புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிட்டிருக்கும் நடிகர் விஜய் மகேஷ் பாபுவின் டுவிட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு, ‘இது உங்களுக்காக மகேஷ் பாபு. பசுமை இந்தியாவுக்கும் நல்ல ஆரோக்கியத்துக்கும். பாதுகாப்பாக இருங்கள்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here