கொரோனா தடுப்பூசியை உருவாக்கியது ரஷ்யா!

உலகில் முதல் முறையாக கொரோனா தடுப்பு ஊசியை ரஷ்யா கண்டு பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த 8 மாதங்களாக உலக நாடுகளை புரட்டி எடுத்து வருகிறது. உலகம் முழுவதும் இந்த கொடிய வைரஸ் தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தினம் தினம் ஆயிரக்கணக்கில் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்த நிலையில் இந்த வாரத்துக்குள் உலக அளவில் கொரோனா பாதிப்பு 2 கோடியை எட்டும் என உலக சுகாதார அமைப்பு கணித்தது. ஆனால் கொரோனா பாதிப்பு நேற்று 2 கோடியை தாண்டியது. பலி எண்ணிக்கையும் 7 இலட்சத்து 50 ஆயிரத்தை மிஞ்சும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானோம் கூறினார்.

இந்நிலையில் ரஷியாவில் கொரோனாவுக்கான தடுப்பூசி பரிசோதனை தொடங்கி உள்ளது.

கொரோனாவுக்கான மேம்படுத்தப்பட்ட தடுப்பூசியை ரஷ்யா கண்டுபிடித்துள்ளதாக புடின் பெருமிதம் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசியை பதிவு செய்த முதல் நாடு ரஷ்யா என்று பெருமிதம் தெரிவித்துள்ளது. உலகில் முதல் முறையாக கொரோனா தடுப்பு ஊசியை ரஷ்யா கண்டு பிடித்து, புதின் மகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு சோதனை வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாஸ்கோவில் உள்ள ஹேமாலயா இன்ஸ்டிடியுட் மற்றும் ரஷ்ய ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து சாதனை படைத்துள்ளது. செப்டம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here