நடிகை நடாஷா சூரிக்கும் கொரோனா தொற்று!

நடிகை நடாஷா சூரி கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளார்.

பொலிவூட நடிகையன நடாஷா தற்போது டேஞ்சரஸ் படத்தில் நடித்து வருகிறார்.

“ஓகஸ்ட் தொடக்கத்தில் இருந்து நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன். ஒகஸ்ட் 1 ஆம் திகதி, நான் சில அவசர வேலைகளுக்காக புனேவுக்குச் சென்றிருந்தேன். அங்குதான் தொற்றிற்குள்ளானேன் என்று நினைக்கிறேன். சகோதரி ரூபாலி, பாட்டி கூட இப்போது தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

அவர்களும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தனர். ஆனால் நல்ல பகுதி, நாம் அனைவரும் படிப்படியாக மீண்டு வருகிறோம். இது ஒரு விசித்திரமான தற்செயல் நிகழ்வு, எனது த்ரில்லர் டேஞ்சரஸ் படத்தின் விளம்பர நடவடிக்கைகளில் இருந்து நான் விலக வேண்டும். ஓகஸ்ட் 14 ஆம் திகதி வெளியிடப்படவிருக்கிறது. என் சக நடிகர்களான பிபாஷா பாசு மற்றும் கரண் சிங் குரோவர் ஆகியோருடன் திரைப்பட விளம்பரங்களில் பங்கேற்க ஆர்வமாக உற்சாகமாக எதிர்பார்த்தேன். ஆனால் கோவிட் தாக்கத்தால் எங்கள் டிஜிட்டல் வெளியீட்டு திகதியின் அதே பதினைந்து நாட்களில் நான் தனிமைப்பட வேண்டும்”என்று அவர் கூறினார்.

“எப்படியிருந்தாலும், நானும் எல்லோரும் குணமடைகிறோம், கடவுளின் கிருபையால் விரைவில் இணைவோம். இப்போதே, நான் உடல் ரீதியாக பலவீனமாகவும் சோர்வாகவும் உணர்கிறேன், ஆனால் மனரீதியாக நான் உற்சாகமாக இருக்கிறேன், பார்வையாளர்களின் கருத்து மற்றும் எதிர்வினையை எதிர்நோக்குகிறேன் என் படத்திற்கு” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here