பிரதேசசபை வாகனத்தில் மனைவியை ஏற்றி இறக்கிய தவிசாளர்: நாளை என்ன நடக்கும்?

வலி வடக்கு பிரதேசசபையின் தவிசாளர் சோ.சுகிர்தன், பிரதேசசபைக்கு சொந்தமான வாகனத்தை தனது சொந்த தேவைக்கு பயன்படுத்தி வருவதை பற்றி தமிழ்பக்கம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது.

தனது மனைவியை பாடசாலைக்கு ஏற்றி இறக்க அவர் பிரதேசசபை வாகனத்தை பயன்படுத்துவதாக உறுப்பினர்கள் சபையில் குற்றம்சுமத்தியிருந்தனர்.

பிரதேசசபை வாகனத்தை தவிசாளர் தனது வீட்டில் தரிக்க வைத்திருக்கவும் சட்டத்தில் இடமில்லை. எனினும், அதையும் மீறி சுகிர்தன் தனது வீட்டில் வாகனத்தை தரிக்க வைத்திருக்கிறார்.

கடந்த சபை அமர்வில் உறுப்பினர்களால் இது பிரஸ்தாபிக்கப்பட்டது. கடந்த கூட்டக்குறிப்பில் இந்த விடயமும் பதிவாகியுள்ளது. கடந்த கூட்ட குறிப்புக்களின் அடிப்படையில், நாளைய பிரதேசசபை அமர்வில் விடயங்கள் ஆராயப்படவுள்ளன. தவிசாளரின் வாகன விவகாரமும் நாளை ஆராயப்படும், பெரும் சர்ச்சை வெடிக்குமென்று தெரிகிறது.

இதேவேளை கடந்த 5 அமர்வுகளில் வலி வடக்கு பிரதேசசபை 72 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. அவை குறித்தும் நாளை ஆராயப்படவுள்ளது.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here