தமிழ் தேசிய பரப்பிலுள்ள கட்சிகள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்: சித்தார்த்தன் அழைப்பு!

தமிழ் மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூநிலையில் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகள் ஒன்றாக இணையாது விட்டாலும் ஒற்றுமையாக
செயற்பட முன்வர வேண்டும் என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் கந்தரோடையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நடைபெற்று முடிந்துள்ள பாராளுமன்ற தேர்தலின் முடிவுகளின் படி கோத்தபாய அரசு மிகவும் பலம் அடைந்துள்ளது. தமிழ் மக்கள் தற்போது கடும் நெருக்கடியான சூழ்நிலையில் உள்ளனர்.

இவ்வாறான நிலையில் கஜேந்திரகுமார் அணியும் விக்னேஸ்வரன் அணியும் எம்முடன் ஒன்றாக இணையாது விட்டாலும் பரவாயில்லை தமிழ் மக்கள் நலன் சார்ந்து செயற்பட நாம் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்.

நாம் ஒன்றிணையாது விட்டாலும் பரவாயில்லை ஒற்றுமையாக மனப்பூர்வமாக செயற்பட வேண்டும். வார்த்தைகளால் மட்டும் அல்லாது மனபூர்வமாக ஒற்றுமையாக செயற்பட வேண்டும்.

நான் எமது கட்சியுடன் இணையுங்கள் என்று கூறவில்லை. மாறாக மக்கள் நலனுக்காக தற்போதைய சூழ்நிலையில் ஒற்றுமையாக செயற்பட முன்வாருங்கள் என்றே அழைப்பு விடுக்கின்றேன்.

இது நடைபெற வேண்டும். வெறுமனே மக்களுக்கு நான் ஒற்றுமையாக செயற்பட தயாராக இருக்கின்றேன் என ஒருவருக்கு ஒருவர் காட்டிக்கொள்ளாமல் உண்மையிலேயே ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here