துரைராசசிங்கத்தை தூக்கியெறியுங்கள்: சம்பந்தனிடம் கோரிய மட்டக்களப்பு பிரமுகர்கள்!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கம் செயற்றிறன் அற்றவர், அவரை உடனடியாக அந்த பொறுப்பிலிருந்து விலக்கி, புதியவரை நியமியுங்கள் என இரா.சம்பந்தனை நேரில் சந்தித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு பிரமுகர்கள் சிலர் நேற்று திருகோணமலைக்கு சென்று, சம்பந்தனிடம் இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.

முன்னாள் எம்.பி, சிறிநேசனிற்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்க வேண்டுமென கோருவதற்காக, மட்டு மாகரசபை முதல்வர் தி.சரவணபவன், வவுணதீவு பிரதேசசபை தவிசாளர் சண்முகராசா, பட்டிப்பளை பிரதேசசபை தவிசாளர் சி.புஸ்பலிங்கம், இளைஞரணி தலைவர் திவாகரன், தமிழ் அரசு கட்சியின் பட்டிருப்பு தொகுதி பொருளாளர் நடராசா, மட்டு மாநகரசபை உறுப்பினர் மதன், மட்டக்களப்பு தமிழரசு கட்சியின் தொகுதி கிளை தலைவர் கோபாலபிள்ளை, இளைஞரணி செயலாளர் சசிதரன் ஆகியோர் இரா.சம்பந்தனை சந்தித்தனர்.

எனினும், இரா.சம்பந்தனிடம் சென்ற பின்னர், முடிவை மாற்றி சிறிநேசன் பற்றி பேசுவதை தவிர்த்து விட்டனர்.

மாறாக, கட்சியின் செயலாளர் பற்றிய முறைப்பாட்டை முன்வைத்தனர். கட்சியின் செயலாளர் செற்றிறன் இல்லாமல் இருப்பதாலேயே கட்சி சரிவை சந்தித்தது, மாகாணசபை தேர்தலின் முன்னர் கட்சியை மீளெழ வைப்பதெனில், புதிய செயலாளரை நியமிக்க வேண்டுமென கோரினர்.

செயலாளர் துரைராசசிங்கம் பற்றி பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளாகவும், விரைவில் அது பற்றி முடிவெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here