இன்று பதவியேற்கிறார் மஹிந்த… தலதா மாளிகையில் பதவியேற்கவுள்ள அமைச்சரவை!

புதிய அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ச இன்று (9) பதவியேற்கவுள்ளார்.

களனி ரஜமகா விஹாரையில் பதவியேற்பு நடைபெறவுள்ளத. இந்த நிகழ்வில் பொதுஜன பெரமுனவின் சார்பில் தெரிவான எம்.பிக்கள் அனைவரும், மற்றும் பங்காளிக்கட்சிகளிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த வெள்ளிக்கிழமை (ஓகஸ்ட் 14) 26வது அமைச்சரவை ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளது.

கண்டி தலதா மாளிகை பார்வையாளர் மண்டபத்தில் அமைச்சரவை பதவியேற்கவுள்ளது.

இதேவேளை, தேசிய அரசாங்கம் அமைக்கும் போது 45 அமைச்சர்களை நியமிக்கலாமென்ற விதியை பின்பற்றுவதில்லையென ஜனாதிபதி கோட்டாபய தீர்மானித்துள்ளார். தேசிய அரசாக அல்லாமல், பங்காளிகளின் ஆதரவுடன் ஒரு அரசியல் அமைப்பாக செயற்பட ஜனாதிபதி முடிவு செய்துள்ளார்.

தேசிய அரசின் மூலம் பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் 45 பேரை நியமிக்கலாமென விதியுள்ளபோதும், புதிய நியமனத்தில் பிரதி அமைச்சர்கள் மற்ம் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 40ஐ தாண்டாது என தெரிய வருகிறது.

பொதுத்தேர்தலில் வெற்றியீட்டிய பெரமுன, தேசியப்பட்டியல் ஆசனங்கள் உள்ளடங்களாக 145 ஆசனங்களை கைப்பற்றியது. கோட்டா அரசின் பங்காளிகளான ஈ.பி.டி.பி -2, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் பிள்ளையான், தேசிய காங்கிரஸ் சார்பில் அதாவுல்லா, சுதந்திரக்கட்சி சார்பில் யாழில் அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் ஆதரவுடன் 150 என்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை எட்டியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here