பொதுஜன பெரமுன எம்.பியின் சகோதரியை மணக்கிறார் கூட்டமைப்பு எம்.பி!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சாணக்கியா ராகுல் வீரபுத்திரன், விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட எம்.பியும், முன்னாள் அமைச்சருமான திலும் அமுனுகமவின் சகோதரியே அவரது மனைவியாக அமையவுள்ளார்.

கண்டி, கந்தான பகுதியை பிறப்பிடமாக கொண்டிருந்த அவர் தற்போது கொழும்பு கிருலப்பனையில் வசிக்கிறார். அவுஸ்திரேலியாவில் உயர்கல்வியை கற்றவர்.
கடந்த மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெறவிருந்தது. ஆனால், பொதுத்தேர்தல் நேரத்தில்- மஹிந்த தரப்பின் பிரமுகரின் தங்கையுடன் திருமணம் நடப்பது எதிர்மறையான அபிப்பிராயத்தை ஏற்படுத்தும் என்பதால், திருமணம் தள்ளிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here