களுவாஞ்சிக்குடி சந்தையில் கர்ப்பிணி பெண்ணிற்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

களுவாஞ்சிகுடி பொதுச்சந்தையின் முன்வாயில் கதவு உடைந்து விழுந்ததால் கர்ப்பிணி பெண்ணின் உயிரை காவு கொள்ளப் பார்த்த சம்பவம் நடந்துள்ளது.

பட்டிருப்பு தொகுதியின் மத்திய கேந்திர நிலையமாக விளங்குவதும் மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபையின் வருமானத்திற்கு முதுகெலும்பாக விளங்கும் களுவாஞ்சிகுடி பொதுச்சந்தையின் பிரதான முன்வாயில் கதவானது முற்று முழுதாக உடைந்த நிலையில் நெடுங்காலமாக காணப்படுகின்றது. இதனால் பொதுச் சந்தை வர்த்தகர்கள் மற்றும் நாளாந்தம் வரும் பொது மக்கள் சிலரும் பல அசௌகரியங்களை எதிர் நோக்கி வருவதாக தெரியவருகின்றது.

முற்று முழுதாக இரும்பினால் செய்யப்பட்ட இக் கதவானது உடைந்து அருகில் உள்ள சுவரில் சாத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தை முடிந்த பின்னர் சந்தைக்குள்ளே காணப்படும் கடைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. அதனைவிடுத்து பலத்த காற்றடித்தால் சரிந்து விழுவதும் அதனை வர்த்தகர்கள் நிமிர்த்தி வைப்பதும் கால் நடைகள் வந்து அதனை விழுத்துவதுமாக தொடர்ச்சியான அசௌகரியங்களுக்கு வர்த்கர்களும் பொதுமக்களும் முகங் கொடுத்து வருகின்றனர். இக் கதவினை திருத்தியப்பது தொடர்பில் வட்டார உறுப்பினர் தவிசாளர் ஆகியோரிடம் பல தடவைகள் எழுத்து மூலம் அறிவித்தும் நடவடிக்கை எடுக்காதுள்ளனர்.

அண்மையில் அடித்த காற்று காரணமாக சாத்தி வைக்கப்பட்டிருந்த கதவானது ஒரு கர்ப்பிணி பெண்ணின் மேல் விழுந்த நிலையில் கையில் சிறுகாயத்துடன் காப்பாற்றப்பட்டுள்ளார். எனவே மேலும் ஆபத்துக்கள் ஏற்பட முன்னர் உரியவர்கள் இதனை திருத்தியமைக்க வேண்டும் என மக்கள் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here