போஜ்புரி நடிகை தற்கொலை: யாரையும் நம்பாதீர்கள் என ரசிகர்களுக்குக் கடைசியாக அறிவுரை!

போஜ்புரி நடிகை அனுபமா பதக் (40) மும்பையிலுள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 2 அன்று அனுபமா தற்கொலை செய்துகொண்ட நிலையில் அதற்கு ஒருநாள் முன்பு ஃபேஸ்புக் தளத்தில் நேரலையாக ரசிகர்களிடம் பேசியுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதாகவும் யாரையும் நம்ப முடியவில்லை என்றார். அவர் மேலும் கூறியதாவது:

உங்கள் நண்பர் மீது நம்பிக்கை வைத்து உங்கள் பிரச்னையைச் சொல்லி தற்கொலை எண்ணத்தில் உள்ளதாகவும் கூறுகிறீர்கள். ஆணோ பெண்ணோ அவர் எப்படிப்பட்ட நல்ல நண்பராக இருந்தாலும் சரி, உங்கள் பிரச்னையிலிருந்து அவர்களைத் தள்ளி வைக்கச் சொல்வார்கள். அப்போதுதான் நீங்கள் இறந்தால் அவர்களுக்குத் தொந்தரவு எதுவும் வராது. மேலும் மற்றவர்கள் முன்பு உங்களை அவமானப்படுத்துவார்கள். எனவே உங்கள் பிரச்னையை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாதீர்கள். யாரையும் உங்கள் நண்பராகக் கருதாதீர்கள்.

எல்லோரும் நம்பும் நபராக நீங்கள் இருந்து, யாரையும் நம்பாதீர்கள். இதை என் வாழ்க்கையில் கற்றுக்கொண்டுள்ளேன். மக்கள் மிகவும் சுயநலத்துடன் உள்ளார்கள், யாரைப் பற்றியும் அவர்களுக்குக் கவலையில்லை என்று பேசியுள்ளார்.

போஜ்புரி படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ள அனுபமா பதக், பிகார் மாநிலத்தின் புர்னியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். மும்பையில் வசித்து வந்தார். அவருடைய மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணத்தை ஒரு கடிதத்தில் அனுபமாக எழுதியுள்ளார். அக்கடிதத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here