கேரளாவில் விமான விபத்து: 14 பேர் பலி!

கோழிக்கோடு விமான விபத்தில் 14 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா ஊரடங்கால், வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை, வந்தே பாரத் திட்டத்தின் மூலம், இந்தியா அழைத்து வரும் பணியை மத்திய அரசு செய்து மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், துபாயில் சிக்கி தவித்த இந்தியர்கள் 191 பேர், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமானம் கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விமானம் விபத்துக்குள்ளானது. தரையிறங்கும் போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளாகி பாதியாக உடைந்தது,

ஓடுதளம் அருகே வந்த போது, 35 அடி உயரத்தில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானம் இரண்டாக உடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உயிரிழந்தவர்களில் விமானியும் உள்ளடங்குகிறார்.

விமானம் தரையறங்க முன்னர் கனமழை பெய்தது. விமானம் தரையிறங்குவதற்கு இரண்டு முறை முயன்று, முடியாமல் விமான நிலைய வான் பரப்பில் சுற்றி வந்துள்ளது.

விமானத்தில் இருந்த பலர் காயமடைந்து உள்ளனர் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் கோழிக்கோடு விமான விபத்தில் 14 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 123 பேர் படுகாயமடைந்துள்ளனர் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன.

மலைப்பாங்கான பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலைய ஓடு பாதைகளில், விமானத்தை தரையிறக்குவதில் ஒளியியல் மாயை சவாலை விமானிகள் எதிர்கொள்வர். உயரமாக உள்ள விமான நிலைய ஓடுபாதைகளிற்கும், அருகில் தாழ்வான பகுதி வீதிகளிற்குமான ஒளியில் மாயை குறித்து, 2010 மங்களூர் விமான விபத்து குறித்து நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here