சாவகச்சேரியில் ரவிராஜின் சிலைக்கு கறுப்புக்கொடி!

மாமனிதர் ரவிராஜின் சிலைக்கு கறுப்புக்கொடி போர்த்தப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் சிலை சாவகச்சேரியில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் மாமனிதர் என்ற வாசகம் பொறிக்கப்படாமல், திறக்கப்பட்டது.

மாமனிதர் ரவிராஜின் மனைவி, சசிகலா இம்முறை பொதுத்தேர்தலில் போட்டியிட்டார். விருப்பு வாக்கின் அடிப்படையில் அவர் 4வது இடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பில் இலங்கை தமிழ் அரசுகட்சியின் இன்னொரு வேட்பாளர் தொடர்பில் சசிகலா தரப்பினர் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று சாவகச்சேரியிலுள்ள ரவிராஜின் சிலைக்கு பெண்கள் சிலரால் கறுப்பு கொடி போர்த்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here