மக்கள் ஆணையை ஏற்கிறோம்; இணைந்து செயற்பட கதவை திறந்து வைத்துள்ளோம்: விக்னேஸ்வரன், கஜேந்திரகுமாருக்கு சுமந்திரன் அழைப்பு!

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகளிற்கு மக்கள் அளித்த ஆணையை ஏற்றுக்கொள்கிறோம். அதேபோல, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மக்கள் அளித்த ஆணையை அவர்கள் ஏற்றுக்கொண்டு, தமிழ் மக்களின் நெருக்கடியான காலகட்டத்தில் ஒன்றிணைந்து செயற்படுவோம் என அழைப்பு விடுத்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாள் எம்.ஏ.சுமந்திரன்.

இன்று யாழில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்த பகிரங்க அழைப்பை விடுத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 10 பேராகவே அமரப் போகிறது. யாழ்ப்பாணத்தில் இருந்து விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார், இன்னொருவர் பாராளுமன்றம் செல்லவுள்ளனர். அவர்கள் எங்களோடு இணைந்து, அல்லது நாங்கள் அவர்களோடு இணைந்து செயற்பட வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறேன்.

இந்த நாடாளுமன்றத்தில் எதிர்கொள்ளவுள்ள சவால் என்பது மிக பெரியது. அதை நாம் இணைந்து எதிர்கொள்ள வேண்டும். உங்கள் மீதும் நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்துள்ளனர். உங்களிற்கு மக்கள் கொடுத்த ஜனநாயக தீர்ப்பை நாம் ஏற்றுக்கொள்வதை போல, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு 10 ஆசனங்கள் கொடுத்துள்ள மக்களின் ஜனநாயக தீர்ப்பை நீங்கள் மதிப்பீர்கள் என நம்புகிறேன். நாங்கள் இணைந்து தமிழ் மக்களிற்கு எதிராக எழுந்துள்ள இந்த பாரிய சவாலை முறியடிக்க, சேர்ந்து பயணிக்க எங்களுடைய கதவுகள் திறந்துள்ளன என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here