மினி சூறாவளியால் யாழில் விவசாயிகள் பாதிப்பு!

0
யாழ்ப்பாணத்தில் நேற்று மினி சுறாவளியின் தாக்கத்தினால் சிறுப்பிட்டி ஜனசக்தி குடியிருப்பு பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை மழையுடன் கூடிய திடீர் காற்று வீசியது. இதன்போது மினி சூறாவளி வீசியதில் வீடுகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் பெருந்தொகையான பப்பாசி மற்றும் வாழை மரங்களும் வலிகிழக்கின் பல பகுதிகளிலும் அழிவடைந்துள்ளன.
திடீர் சூறாவளி காரணமாக சிறுப்பிட்டி ஜனசக்தி குடியிருப்புப் பகுதியில் பனை மரம் ஒன்று முறிவடைந்து வீடென்றின் கூரையின் மீது வீழ்ந்ததில் அவ் வீடு பாரியளவில் சேதமடைந்துள்ளது. இதேவேளை மேலும் சில வீடுகளின் சீற்கள் காற்றின் வேகத்தினால் உடைந்துள்ளன. வீட்டுக்கூரைகள், கொங்கிறீட் சுவர்கள் உடைந்து விழுந்தபோதும் குடியிருப்பாளர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
சிறுப்பிட்டிப் பகுதியில் பெறுமதியான விவசாயச் செய்கைகளும் அழிவடைந்துள்ளன. பெறுமதி மிக்க வாழை, பப்பாசி போன்ற பயிர்கள் கடும் காற்றின் காரணமாக முறிவடைந்துள்ளன. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here