ரம்பாவிற்கு மூன்றாவது வளைகாப்பு!

நடிகை ரம்பா மூன்றாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார். அவருக்கு கனடாவில் வளைகாப்பு சீமந்தம் நடைபெற்றுள்ளது.

நடிகை ரம்பா, சுந்தர புருஷன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் நடித்த உள்ளத்தை அள்ளித்தா, செங்கோட்டை, அருணாசலம், ராசி, வி.ஐ.பி. நினைத்தேன் வந்தாய், காதலா காதலா, மின்சார கண்ணா, ஆனந்தம் உள்பட பல படங்கள் வெற்றி பெற்றன.

தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்தார். இந்தி, மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

சில காலத்தின் முன் கணவருடன் அவருக்கு முரண்பாடு ஏற்பட்டது. பின்னர் குடும்பத்திலுள்ள பெரியவர்கள் தலையிட்டு, இருவரையும் சமரசப்படுத்தினர். இந்த நிலையில் ரம்பா மூன்றாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார். அவருக்கு கனடாவில் வளைகாப்பு சீமந்தம் நடைபெற்றுள்ளது.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here